NewBie

Monday, December 04, 2006

ஒரு புது முயற்சி

நாரதர் : " நாராயணா !! நாராயணா !! " விஷ்ணு : " என்ன நாரதரே.. மிகவும் கவலையுடன் உள்ளீர்கள் ?" நாரதர் : "பிரபு !! பூலோகத்தில் 2 நாட்கள் இருந்தேன். ஒரு வயதான அம்மாவின் குரல் கேட்டது. அவள் உங்களை சபித்து கொண்டு இருந்தாள்..." விஷ்ணு : " எதற்காக நாரதரே?" நாரதர் : " பிரபு !! உங்களுக்கு தெரியாததா? அந்த அம்மையார் உயிர் வாழ ஆசை இல்லாமல் உங்களடி சேர தினமும் பிரார்தனை செய்கிறாள். தாங்கள் அவள் பிரார்தனையை நிறைவேற்றாததால் உங்களை சபித்து கொண்டு இருந்தாள். " விஷ்ணு : " என்ன கொடுமை இது? வாழ பிடிக்காத அளவிற்கு அவளுக்கு என்ன பிரச்சனை?" பிரம்மா : "பிரபு !! எல்லாம் மருமகள் பிரச்சனை தான். உங்களை சபிப்பவர்கள் மிகவும் குறைச்சல்..ஆனால் என்னை எல்லா பெண்களும் தினமும் சபிக்கின்றனர்." நாரதர் : " ஆம் பிரபு !! 'என்னை ஏன் பெண்ணாக படைத்தாய்?' என்று புலம்பாத பெண்களே இல்லை" பிரம்மா : "பிரபு !! இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு சொல்லுங்கள் " முருகர் : " இப்பொழுது தான் கூட்டு குடும்பங்கள் குறைந்து விட்டதே பிறகு என்ன பிரச்சனை?" நாரதர் : " முருகா ! கூட்டு குடும்பங்கள் பல வகைகளில் உதவுகின்றன. கணவன் மனைவி பிரச்சனை, குழந்தை வளர்ப்பு என சொல்லிக்கொண்டே போகலாம்." விஷ்ணு : "இப்பொழுது என்ன செய்வது? விநாயகர் : " நாரதரே ! எல்லா பிரச்சனைகளையும் விவரியுங்கள்" நாரதர் : " 1. பெண்கள் தான் பெண்ணாக பிறந்ததையே சாபமாக நினைக்கின்றனர். வாழ்வில் அவர்களுக்கு துன்பம் மட்டும் தான் என்று புலம்புகின்றனர். 2. எந்த பெண்ணும் தனக்கு பெண் குழந்தை பிறப்பதை விரும்பவுது இல்லை. 3. மாமியார் மருமகள் பிரச்சனையால் குடும்பத்தில் அனைவர் அமைதியும் குலைகிறது." விநாயகர் : " எல்லா பெண்களும் திருமணத்திற்கு பிறகும் தன் பெற்றோரோடு இருக்கட்டும். இதுவும் கூட்டு குடும்பம்தானே. இதனால் பெண்கள் தனக்கு பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்று விரும்புவர். மாமியார் மருமகள் பிரச்சனை மறைந்துவிடும். குடும்பத்தில் அமைதி நிலவும்." நாரதர் : " இது ஒரு புது முயற்சி தான். ஆனால் ஆண்கள் தன் பெற்றோரை பிரிந்து இருக்க வேண்டுமே?" விநாயகர் : " ஆண்களால் இதுவரை ஏதேனும் பிரச்சனை வந்ததுண்டா? குடும்ப அமைதிக்காக தினமும் கஷ்டப்படுபவர்கள் இந்த தியாகத்தையும் செய்யட்டுமே. இரு பெண்கள் ஒற்றுமையாக இருப்பது அதிசயம், தாய் மகளை தவிர !!" முருகர் : "அண்ணா !! நீங்கள் சொல்வது சரிதான்." பிரம்மா : " விநாயகா !! நீ சொல்வது போல் உலகை மாற்றி அமைக்கிறேன். அப்பொழுதாவது அமைதி நிலவுகிறதா என்று பார்க்கலாம் !!"